Wednesday, August 20, 2008

நோன்பின் மாண்பு

வருடத்தில் ஒருமுறைவரும்நோன்பு எனும் கடமை,
முஸ்லீம்களின் வாழ்வினில் ஒருமகத்தான கடமை,
பசி,பட்டிணி என்பதறியாத பணபலம் படைத்தவர்களுக்கும்,
பசி என்றால் என்ன என்பதை உணர்த்தும் நோன்பு,
காலைமுதல் மாலைவரை பசித்திருந்து இறைவனுக்காக நாம் சொல்லும்நன்றிதான் நோன்பு,
இப்பூவுலகத்தை படைத்து பராமறித்து ,அண்ட சராசரங்களை அடக்கி ஆளும் அதிபதிக்கு அவன் தொண்டர்கள்செய்யும் நன்றிதான் நோன்பு,
பணபலம் தன்னிடம் பரந்து கிடந்தாலும்,பைசாகூட தர்மம் செய்ய மனம் இல்லாத,பகட்டான இவ்வுலகை நேசிக்கும்பணம் படைத்தவர்களுக்கும்,
ஏழைஎழியவர்களுக்கு உதவ மனம் தரும் மாண்பானமாதம் தான் நோன்பு,
இஸ்லாத்தின் ஜந்து முக்கிய கடமைகளில் -ஒன்றானதுதான்நோன்பு,
ஜம்புலன்களையும் ஆண்டவனுக்காக தன்னால் அடக்கமுடியும்,என்றுகூறும்
மகத்தான மாதமேநோன்புமாதம்,
நல்ல உணவுகளை ருசித்திராத எழைஎழியமக்களுக்கும் -
வசதிபடைத்தவர்கள் வாரி வழங்கி நன்மைகளைதேடிக்கொள்ளும்மாதம்தான் இப்புனிதரமளான் மாதம்,
முஸ்லீம் மக்களுக்கு ஜகாத் எனும் ஏழை வரியை கண்டிபபாக ஏழைகளுக்கு
வழங்கசொல்லும் மாதம் தான் இப்புனித நோன்புமாதம்,
இந்த பூலோகமக்கள் அனைவருக்கும் பொதுவான புகழ்மிக்க -
சங்கை மிக்க திருக்குரான் இறைவனால் அருளப்பட்டதும் இப்புனிதமாதத்தில்தான்,
இவ்வளவு நன்மைகளும் ஒருங்கேகொண்ட மாதம்தான் நோன்பு மாதம்,
இதனால் தான் என்னவோ? -
நபிகள்நாயகத்தின் காலத்தில் வாழ்ந்த சஹாபா தோழர்கள் கூறினார்களாம்
நீங்கள் உத்தரவிட்டால் நாங்கள் ஆண்டுமுழுவதும் நோன்பு வைக்கிறோம்,
என்றார்களாம், அதற்கு
நபிகள் சொன்னார்களாம், வேண்டாம்,
இஸ்லாம் சொன்னதையேநீங்கள்செய்யுங்கள்,
பிறரையும் செய்யசொல்லுங்கள்,
இறைவன் உங்களை துன்புறுத்த விரும்பவில்லை,
நீங்கள் பசித்திருப்பதினால் தாகித்திருப்பதினால் இறைவனுக்கு,எந்ததேவையும் இல்லை,
இந்தநோன்பு மாததில் நீங்கள்செய்யும் நற்செயல்களும்,நன்மையைஏவுவது
தீமைகளை தடுப்பதும்,வணக்க வழிபாடு களில் ஈடுபடுவது -
மனதால் கூட பிறருக்கு துன்பம் விழைவிக்காத மனம் தரும் மாதம் தான் நோன்பு மாதம்,
இப்புனிதமிக்க ரமளானை வரவேற்போம்,
அனைவரும் நோன்புபிடிபோம் ,
நல்லதையே நினைப்போம் ,நல்லதேயேசெய்வோம், நபியின்வழிநடப்போம்,
இறைவன் நாடினால்.

No comments: