Saturday, August 16, 2008

சுதந்திரதாகம்

நம் இந்திய திருநாடு தனது 61 வதுசுதந்திரதினத்தினைகொண்டாடுகிறது,நாம் அனைவரும் கொண்டாடிமகிழ்கின்றோம், இந்நாளில் நாம் எல்லோரும் பெற்றசுதந்திரத்தை பேணிகாக்கவேண்டும்,எல்லோருக்கும் எல்லாமும்கிடைக்கவேண்டும்,கல்லாமை இல்லாதுசெய்திடவேண்டும்,வசதிபடைத்தவன்வறியவனுக்கு உதவ வேண்டும்,ஜாதிமதபேதமில்லாத துணிவுமிக்க அரசு மலரவேண்டும்,லஞ்சம்வாங்காத அதிகாரிகள் வரவேண்டும்,லஞ்சம்வாங்கினால்வீட்டுக்கு அனுப்பவேண்டும்,அரசுஅதிகாரிகள் உண்மையாக நேர்மையாக மக்களுக்கு உழைக்கவேண்டும்,நாட்டுமக்கள்நல்லதையைநினைக்கவேண்டும்,நம்பிரதமர்குண்டுதுளைக்காதமேடையிலும்,நம்முதல்வர்குண்டுதுளைக்காதஜீப்பிலும்,வந்து உரையாற்றுவதும்,ராணுவ அணிவகுப்பை பார்வையிடுவதும்,இதுதான் சுதந்திரமா?இதுதான் மஹாத்மாகண்ட சுதந்திர இந்தியாவா?எப்போதுதனிமையில் இரவில் ஒரு பெண்வீதியில் எந்த பயமும் இன்றி உலாவருகிறாளோ; அப்போதுதான் உணமையான சுதந்திரம் கிடைத்துவிட்டது,என்று காந்திமஹான்கண்டகனவுபலிக்குமா?இங்குநாம் பிரதமருக்கும்,முதல்வருகும்,ஜந்து அடுக்கு பாதுகாப்புபோடுகிறோம்,ஏனிந்த நிலைசற்றுசிந்திக்ககடைமைபட்டுள்ளோம்,உண்மையான சுதந்திரத்தை அடைய இத்தகைய நிலைமறைய நாம் அனைவரும் முயலவேண்டும்,அரசுஅதிகாரிகள்ஜாதிமதபேதமில்லாமல் பணியாற்றவேண்டும்,ஊடகங்கள் மக்களிடம் செய்திகளைகொண்டுசேர்ப்பதில்முக்கியபங்குவகிக்கின்றன, இவை விளம்பறத்துக்காகவும்,லாபநோக்கோடுமில்லாமல் ஜாதிமத உணர்வை தூண்டாமல், வேறுபாடுஇன்றி செய்திகளைவெளியிடவேண்டும்,உண்மையா?இல்லையா என்ற செய்திகளை தவிர்த்து உண்மையாக இருந்தால் மட்டுமேவெளியிடவேண்டும்,காவல் துறைகளும் தன்கடைமையை ஜாதிமதவேறுபாடுகளை களைந்து நேர்மையாகசெயல்படவேண்டும்,அரசியல்வாதிகள் சுயநலமில்லாமல் மக்களுக்காக பாடுபடவேண்டும்,மதுஎனும் அரக்கனை நாட்டை விட்டே விரட்டவேண்டும்,பிறர்பொருள்மீது ஆவல்கொள்ளாதமனம்வேண்டும்,இச்சிந்தனைகளோடு அனைவரும் உழைத்தால் ,காந்திமஹான் கண்ட கனவை நனவாக்கலாம்;முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கண்ட வல்லரசான பாரதத்தை காணும் தூரம் வெகுதொலைவில் இல்லை,இது இந்த நல்லூர்வாசியின் (சின்ன)ஆசையும்கூட;வாழ்க இந்தியா வளர்க இந்திய மக்கள்.